யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகிய இந்தப் பட்டமளிப்பு வைபவம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை 12 அமர்வுகளாக நடைபெறுகிறது.
இன்றைய அமர்வில் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த மாணவி செல்வி தங்கராசா ஜஸ்மின் யூலிற்றா (Thangarasa Jasmin Julitta) வியக்கத்தக்க சாதனையைப் புரிந்துள்ளார். தனது கல்வித் துறையில் ஆற்றிய சிறந்த பெறுபேறுகளுக்காக ஒரே மேடையில் 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். பதக்கங்களுடன் மேலதிகமாகப் பணப்பரிசில்களையும் பெற்று பல்கலைக்கழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

#UoJConvocation #JaffnaUniversity #JasminJulitta #GoldMedalist #AcademicExcellence #JaffnaGraduation #LKA #EducationSuccess2026

