Home இலங்கைகாணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரின் தகவல்களை வெளிப்படுத்தக் கோாி போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரின் தகவல்களை வெளிப்படுத்தக் கோாி போராட்டம்

by admin

 

 

இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, வடமராட்சி – கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்த கோரி பருத்தித்துறையில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஊடகவியலாளர் இராமச்சந்திரன் வீடு திரும்பிய போது துன்னாலை கலிகை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வைத்து கடந்த 15.02.2007 அன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதன் 19 ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதி கேட்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

#JusticeForRamachandran #JournalistSafety #JaffnaProtest #ForcedDisappearance #TamilMedia #PointPedro #HumanRightsSriLanka #LKA #Impunity

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More