Home இலங்கைஅக்குரேகொட இரட்டைக்கொலை – துப்பாக்கிதாரி கைது; சூத்திரதாரி வெளிநாட்டுக்குத் தப்பி ஓட்டம்!

அக்குரேகொட இரட்டைக்கொலை – துப்பாக்கிதாரி கைது; சூத்திரதாரி வெளிநாட்டுக்குத் தப்பி ஓட்டம்!

by admin
அக்குரேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொடூரப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் முக்கிய முன்னேற்றங்களை எட்டியுள்ளனர்.
📍 இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாகக் கருதப்படும் முக்கிய சந்தேகநபர் (துப்பாக்கிதாரி) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளிக்கு தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்து, கொலைக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்த கஹதுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர், தற்போது தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற நபர், பிரபல குற்றவாளியான ‘கரந்தெனிய சுத்தா’ என்பவரின் மிக நெருங்கிய சகா என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) இன்று (21) இரண்டு கார்களைப் பறிமுதல் செய்துள்ளனர்:
1. துப்பாக்கிதாரியை ஏற்றிச் சென்ற கார்.
2. தப்பியோடிய நபர் கட்டுநாயக்க விமான நிலையம் செல்வதற்குப் பயன்படுத்திய வாடகை கார்.
🔍 இந்தக் கொலைச் சம்பவத்திற்கு முன்னர், துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டியிலுள்ள தங்குமிடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றதும் இந்த கஹதுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே என்பது விசாரணைகளில் உறுதியாகியுள்ளது. தற்போது சர்வதேச பிடியாணையை (Red Notice) பெற்று, தப்பியோடியவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More