Home இலங்கைஇலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் -அழகு சாதன பொருட்கள் பறிமுதல்:

இலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் -அழகு சாதன பொருட்கள் பறிமுதல்:

by admin
மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே உள்எ தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  இந்திய மதிப்பில் 10 லட்சம் மதிப்பிலான  வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட வயாகரா, வலி நிவாரணி மாத்திரைகள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை ராமநாதபுரம் கியூ பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கூட்டாக இன்று (3)  அதிகாலை பறிமுதல் செய்து தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கை இந்திய சர்வதேச கடல்   ஊடாக   தமிழகத்தில் இருந்து கடல் அட்டை, கஞ்சா போதை பொருள், அழகு சாதன பொருட்கள், வலி நிவாரணி மாத்திரைகள், சமையல் மஞ்சள், முந்திரி, ஏலக்காய், சுக்கு உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடல் வழியாக கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் க்யூ பிரிவு மற்றும் ராமநாதபுரம் சுங்க இலாகவிற்கு கீழ் செயல்படும் மண்டபம் சுகத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கூட்டாக மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை பகுதியில் இன்று (3)  அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் வருவதை  கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பி ஓடிய நிலையில் கடற்கரை ஓரம் உள்ள தோப்பு ஒன்றில் சோதனை செய்தபோது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக 20,400 வலி நிவாரணி மாத்திரைகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 4800 வயாகரா மாத்திரைகள், அழகு சாதன பொருட்கள், சோப்பு,  உள்ளிட்டவைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்ததுடன், அங்கு இருந்த  படகு இரண்டு எஞ்சின்கள் கைப்பற்றிய கியூ பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்களின் இந்திய மதிப்பு ரூ.10 லட்சம் எனவும் இதன் சர்வதேச மதிப்பு  17 லட்சம்  இருக்கும் என ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.  மேலும் கடற்கரை ஓரம் நடைபெறும் கடத்தல் சம்பவம் தொடர்பாக பொது மக்கள் மற்றும் மீனவர்கள் சுங்கத்துறை  அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்றும் தகவல் அளிக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு இலங்கையில் தற்போது தட்டுப்பாடு இருப்பதாகவும் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக அங்கிருந்து கடத்திச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

#SmugglingBusted #Ramanathapuram #Mandapam #CustomsRaid
#SriLankaMedicineShortage #QBranch #SeizedGoods

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More