Home இலங்கைஇலுப்பைக் கடவை அரைக்கும் ஆலை புனரமைப்பு: அரசாங்க அதிபர் தலைமையில் திறப்பு விழா!

இலுப்பைக் கடவை அரைக்கும் ஆலை புனரமைப்பு: அரசாங்க அதிபர் தலைமையில் திறப்பு விழா!

by admin

மன்னார், இலுப்பைக் கடவை பகுதியில் அமைந்துள்ள மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் (MPCS) அரைக்கும் ஆலை புனரமைக்கப்பட்டு, நேற்று (2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை) மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்  பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக மாகாண கூட்டுறவு ஆணையாளர் செல்வி அகல்யா ஆகியோர் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர் உட்பட பல அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

 பழைய கட்டிடம் மற்றும் இயந்திரங்கள் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு, தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயப்படுத்தப்பட்டுள்ளJld; நெல் அரைத்தல் முதல் ஏனைய தானியங்கள் மற்றும் மிளகாய் போன்றவற்றை அரைப்பதற்கான அனைத்து வசதிகளும் ஒரே கூரையின் கீழ் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த அரைக்கும் ஆலை திறக்கப்பட்டதன் மூலம், இலுப்பைக் கடவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை அரைப்பதற்காகத் தூர இடங்களுக்குச் செல்ல வேண்டிய சிரமம் குறைந்துள்ளது.

 

 #Illuppaikadawai  #CooperativeSociety #MPCS_Mannar #DevelopmentUpdate  #GovernmentAgent

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More