மியாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் பிரிவில் ஜொஹானா கொன்டா வெற்றியீட்டியுள்ளார். பிரித்தானியாவின் ஜொஹானாவின் மிகப் பெரிய வெற்றியாக மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் வெற்றி கருதப்படுகின்றது. 25 வயதான ஜொஹானா, டென்மார்க்கின் Caroline Wozniacki ஐ வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளார். ஜொஹானா 6-4 6-3 என்ற செற் கணக்கில் Caroline Wozniacki ஐ வீழ்த்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் 940,000 பவுண்ட்கள் பரிசுப் பணமாக பெற்றுக் கொண்டுள்ளார். இந்த வெற்றியுடன் டென்னிஸ் தர வரிசையில் ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ள ஜொஹானா, முதலாம் இடத்தைப் பிடிப்பதே தமது இலட்சியம் என தெரிவித்துள்ளார்.