Home இலங்கை“சுரண்டப்படும் கடன் பெறுவோர்: புதிய நுண்கடன் சட்டமூலத்தால் எற்பட்டுள்ள பாரிய பின்னடைவு – TISL எச்சரிக்கை!”

“சுரண்டப்படும் கடன் பெறுவோர்: புதிய நுண்கடன் சட்டமூலத்தால் எற்பட்டுள்ள பாரிய பின்னடைவு – TISL எச்சரிக்கை!”

by admin

நாடாளுமன்றத்தில் நேற்று (2026 மார்ச் 04, புதன்கிழமை) நிறைவேற்றப்பட்ட நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் (Microfinance and Credit Regulatory Authority Bill) தொடர்பாகத் தர்சிப்பு சர்வதேச இலங்கை (Transparency International Sri Lanka – TISL) தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்படக்கூடிய கடன் பெறுபவர்களைப் பாதுகாப்பதற்கும், ஒழுங்குமுறைத் தோல்விகளைச் சரிசெய்வதற்கும் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம், அதன் அடிப்படை நோக்கத்தை அடைவதில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக TISL சுட்டிக்காட்டியுள்ளது.

2024ஆம் ஆண்டு TISL மற்றும் ஏனையோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நுண்கடன் வணிகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் சமமான ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தது. ஆனால், புதிய சட்டம் இதனை நிவர்த்தி செய்யத் தவறியுள்ளது.

மேலும் புதிய சட்டமானது அரசியலமைப்பு முரண்பாடுகளைக் களைவதற்குப் பதிலாக, பாரிய ஒழுங்குமுறை இடைவெளிகளையும் (Regulatory Gaps) (நுண்கடன்_சட்டம்) ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

#TISL #RegulatoryFailure #SupremeCourtVerdict  #SriLankaParliament#DebtTrap

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More