Home உலகம்“மீண்டும் ஒரு உலகப் பொருளாதார மந்தநிலை? போர் நீடித்தால் ஏற்படப்போகும் விபரீதங்கள் குறித்து IMF விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!”

“மீண்டும் ஒரு உலகப் பொருளாதார மந்தநிலை? போர் நீடித்தால் ஏற்படப்போகும் விபரீதங்கள் குறித்து IMF விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!”

by admin

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா (Kristalina Georgieva), மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய பாரிய தாக்கங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மோதலின் தாக்கம் எவ்வளவு  விரைவாகத் தீர்க்கப்படும் என்பதைப் பொறுத்தே உலகளாவிய பொருளாதாரப் பாதிப்பின் அளவு அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பொருளாதாரப் பாதிப்பிற்கான மூன்று முக்கிய  விடயங்களை அவா் குறிப்பிட்டுள்ளாா்.  முதலாவதாக உலகிற்குத் தேவையான எரிபொருளை வழங்குவதில் மத்திய கிழக்கு நாடுகள் வகிக்கும் முக்கியத்துவத்தினால், அங்கு ஏற்படும் மோதல்கள் எரிபொருள் விலையை உலகளவில் உயர்த்தும் என குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் சந்தை போர் சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களிடையே ஒருவித அச்சமும் நிச்சயமற்ற தன்மையும் உருவாகும். இது புதிய முதலீடுகளைத் தடுப்பதுடன், நுகர்வோரின் செலவு செய்யும் முறையையும் பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவா்  விமானப் போக்குவரத்துத் தடைகள் மற்றும் கடல்வழி வர்த்தகப் பாதைகளில் ஏற்படும் இடையூறுகள் சுற்றுலாத் துறையையும், உலகளாவிய வர்த்தகச் சங்கிலியையும் (Supply Chain) கடுமையாகப் பாதிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளாா்.

இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகள் ஏற்கனவே எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

#IMFWarning #GlobalEconomy #MiddleEastConflict #EnergyCrisis #KristalinaGeorgieva

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More