182
மேற்கத்திய நாடுகளின் இராணுவத் தலையீடுகள் மற்றும் “விடுதலை” என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் போர்கள் குறித்து, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஐரீன் மொன்டெரோ கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“அமெரிக்காவின் குண்டுவீச்சுகளாலோ அல்லது சட்டவிரோத ஆக்கிரமிப்புகளாலோ இதுவரை எந்தப் பெண்ணும் விடுதலை பெறவில்லை.”
சிரியா, ஈராக், லெபனான் அல்லது ஆப்கானிஸ்தான் என எங்குமே இராணுவ நடவடிக்கைகள் தீர்வைத் தரவில்லை.
தற்போது ஈரானிலும் இதே போன்றதொரு போக்கைக் காண முடிகிறது.
தங்களது காலனித்துவப் போர்களை நியாயப்படுத்த, பெண்களின் உரிமைகளை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொள்வதாக அவர் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
இராணுவத் தலையீடுகள் என்பது மனிதாபிமான அடிப்படையிலானது என்பதை விட, அவை புவிசார் அரசியல் நலன்களுக்காகவே செய்யப்படுகின்றன என்பதை மொன்டெரோவின் இந்த உரை மீண்டும் உலக அரங்கில் விவாதப் பொருளாக்கியுள்ளது. குறிப்பாக, ஈரானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த காலத் தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் என அவர் எச்சரித்துள்ளார்.
Spread the love

