Home இலங்கை“கட்டளையை மீறினால் சுட்டுக்கொல்வதா? – வட்டுக்கோட்டை சிறுவன் பலியான விவகாரத்தில் நீதிகோரி வீதியில் இறங்கிய மக்கள்.”

“கட்டளையை மீறினால் சுட்டுக்கொல்வதா? – வட்டுக்கோட்டை சிறுவன் பலியான விவகாரத்தில் நீதிகோரி வீதியில் இறங்கிய மக்கள்.”

by admin

 

யாழ்ப்பாணத்தில் காவற்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது . கடந்த 10ஆம் திகதி தமது கட்டளையை மீறி சென்ற ஹயஸ் ரக வாகனம் மீது  காவற்துறையினர்  மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் , வாகனத்தை செலுத்திய 17 வயதான வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அருள் பயஸ் எனும் சிறுவன் உயிரிழந்தாா்.

குறித்த சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையிலும் , துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு , சிறுவனின் உயிரை போக்கிய  காவற்துறையினர்  மீது குறைந்தபட்ச விசாரணைகளை கூட  காவற்துறையினர்  மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றுக்கு அருகில் போராட்டத்தை முன்னெடுத்த வேளை , நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பம் விதமாக இப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முடியாது என காவற்துறையினர்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து , அங்கிருந்து வெளியேற்றினர்.  அதனை அடுத்து போராட்ட காரர்கள் ஊர்காவற்துறை  காவல்நிலையம் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதேவேளை சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
#JusticeForArulPayas #JaffnaPoliceShooting #KaytsProtest  #HumanRightsSL #Vaddukkoitai
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More