439
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் பமிலியன்ஸ் அணியும் , KCCC அணியும் வெற்றிவாகை சூடி சம்பியனாகியுள்ளன. யாழ் . மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் , யாழ்.மாவட்ட கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்று போட்டியில் , இறுதி போட்டிகளில் யாழ்.பல்கலைக்கழக அணியும் ,பமிலியன்ஸ் அணியும் மோதிக்கொண்டதில் பமிலியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
அதேவேளை ஏஞ்சல் அணியும் KCCC அந்த அணியும் மோதிக்கொண்டதில் KCCC அணி வெற்றி பெற்றது. போட்டியில் சிறந்த ஆட்டநாயகர்களாக விஜயரூபன் சகானா மற்றும் கே.விபூஷன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

#JaffnaBasketball #FamiliansBC #KCCC #SportsJaffna #PlayerOfTheMatch
Spread the love

