மத்திய கிழக்கு பகுதியில் பிரித்தானிய படைகள் மற்றும் கூட்டணி படைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஈரான் ட்ரோன் தாக்குதல்களுக்கு பின்னால் ரஷ்யாவின் “மறைமுக கை” இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கு ஈராகில் உள்ள எர்பில் பகுதியில் அமைந்துள்ள கூட்டணி விமானப்படை தளத்தை நோக்கி ஈரான் ட்ரோன்கள் கூட்டமாக தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலின் போது, பிரித்தானிய படைகள் இரண்டு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தின. எனினும் சில ட்ரோன்கள் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி விமானப்படை தளத்தைத் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது சமீபத்தில் பிரித்தானிய படைகளை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற மூன்றாவது தாக்குதலாகும். இதற்கு முன் சைப்ரஸில் உள்ள RAF அக்ரோதிரி விமானப்படை தளத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், பஹ்ரைனில் பிரித்தானிய படையினருக்கு அருகில் ஏவுகணை ஒன்று விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பின்னால் ரஷ்யாவின் ஆதரவு இருக்கக்கூடும் என பிரித்தானியா குற்றஞ்சாட்டியுள்ளது.
#UKDefence #JohnHealey #IranDroneStrike #RussiaIranAlliance #ErbilAttack #மத்தியகிழக்கு #ட்ரோன்தாக்குதல் ##
#ErbilAttack படை #ரஷ்யா #ஈரான் #சர்வதேசசெய்தி

