Home உலகம்ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்து – மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன

ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்து – மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன

by admin

  
அமெரிக்க விமானப்படையின் KC-135 Stratotanker என்ற எரிபொருள் நிரப்பு (refuelling) இராணுவ விமானம் மேற்குப் ஈராக் பகுதியில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இரண்டு இராணுவ விமானங்கள் தொடர்புடைய ஒரு நிகழ்வின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் ஒன்று பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில் மற்றொரு விமானம் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்க இராணுவம் வெளியிட்ட தகவலின்படி இந்த விபத்து எதிரி தாக்குதல் ல்லது நண்பர் தாக்குதல் காரணமாக இல்லை என தொிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் “friendly airspace” எனப்படும் பாதுகாப்பான வான்வெளியில் இடம்பெற்றுள்ளது என்பதுடன் விமானத்தில் இருந்த படையினரை மீட்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை, ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழு ஒன்று இந்த விமானத்தை தாங்களே சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது, ஆனால் அதனை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

#USMilitaryCrash #IraqNews #MilitaryAviation #PentagonUpdate #RescueMission #அமெரிக்கஇராணுவம் #ஈராக் #விமானவிபத்து #KC135 #சர்வதேசசெய்தி #மத்தியகிழக்கு  

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More