Home உலகம்“Operation True Promise IV” – நெதன்யாகுவை குறிவைத்து ஈரான் கடும் எச்சரிக்கை!

“Operation True Promise IV” – நெதன்யாகுவை குறிவைத்து ஈரான் கடும் எச்சரிக்கை!

by admin
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், “Operation True Promise IV” என்ற பெயரில் 53-வது கட்ட ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள கடுமையான எச்சரிக்கையில், “இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எங்காவது உயிருடன் இருந்தால், அவரைக் கண்டுபிடித்து அழிக்கும் வரை எமது வேட்டை நிறுத்தப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களில் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் வசிப்பிடங்கள் குறிவைக்கப்பட்டு ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், ஈரானின் நேரடி கொலை எச்சரிக்கை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்குள் பெரும் கலக்கத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்தாலும், நெதன்யாகு இனி பாதுகாப்பாக இருக்க முடியாது என ஈரான் ராணுவம் சவால் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் நிலை மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
இந்த செய்தி குறித்து அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More