219
அல் மின்ஹாத் விமான தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Al Minhad Air Base விமான தளம் நோக்கி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த தாக்குதல், மத்திய கிழக்கு பகுதியில் பாதுகாப்பு நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது.
துபாய்க்கு தெற்கே அமைந்துள்ள இந்த விமான தளம், வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் மிக முக்கிய இராணுவ மையமாகத் திகழ்கிறது. இந்தத் தாக்குதல் இப்பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் உள்ள அல் மின்ஹாத் விமான தளம். இது ஐக்கிய இராச்சியம் (UK), அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் வான்வழிச் செயல்பாடுகளுக்கு மையப்புள்ளியாக விளங்கும் இடமாகும்.
ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவற்படை’ (IRGC) தனது நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களைப் (Suicide Drones) பயன்படுத்தி இத்தாக்குதலை முன்னெடுத்துள்ளது. விமான தளத்தின் ஓடுபாதைகள் மற்றும் சில எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் சேதமடைந்துள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை
தொடர்ந்து, தளத்திலுள்ள அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் வான்படை வீரர்கள் பாதுகாப்பான பதுங்கு குழிகளுக்கு (Bunkers) மாற்றப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் மத்திய கிழக்கு நடவடிக்கைகளுக்கான பிரதான தளவாட மையமாக (Main Logistics Hub) இது திகழ்கிறது. அங்குள்ள அவுஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு முதற்கட்டத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் ஈரான; மற்றும் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் தகவல்கள் வெளியாகும் நிலையில், பாதுகாப்பு அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
#AlMinhadBase #IranAttack #UAESecurity #MiddleEastCrisis #MissileStrike
Spread the love

