Home உலகம்நியூசிலாந்து WHO-வின்  புதிய தொற்றுநோய்   விதிகளை அதிகாரப்பூர்வமாக நிராகரித்தது

நியூசிலாந்து WHO-வின்  புதிய தொற்றுநோய்   விதிகளை அதிகாரப்பூர்வமாக நிராகரித்தது

by admin

 

  நியூசிலாந்து  அரசு, உலகளாவிய தொற்று நோய் மேலாண்மைக்கான புதிய விதிகளை முன்வைத்த  உலக சுகாதார அமைப்பின்  (WHO) அமைப்பின் திருத்தங்களை அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.  இந்த முடிவு, 2024 ஆம் ஆண்டு மாற்றங்கள் செய்யப்பட்ட சர்வதேச சுகாதார விதிகள் (International Health Regulations – IHR) தொடர்புடையதாகும். இந்த விதிகள், உலக நாடுகள் தொற்றுநோய்களுக்கு எதிராக எவ்வாறு தயாராக வேண்டும் மற்றும் பதிலளிக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, 2026 மார்ச் 16 ஆம் திகதி நியுசிலாந்து அரசு WHO விடம்  தாம் இந்த புதிய திருத்தங்களை ஏற்க முடியாது என்று அறிவித்துள்ளது.

அரசாங்கம் வெளியிட்ட விளக்கத்தில், “தேசிய சுயாட்சியை (sovereignty) பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய்களை சமாளிக்கும் முடிவுகள், நாட்டின் உள்நாட்டு அதிகாரத்தில் இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், நியுசிலாந்தில்  தற்போது நடைமுறையில் உள்ள IHR விதிகளில் தொடர்ந்து இணைந்தே இருக்கும். ஆனால் புதிய திருத்தங்கள் அந்நாட்டில் அமுல்படுத்தப்படமாட்டாது.

WHO முன்வைத்த இந்த புதிய மாற்றங்கள், COVID-19 போன்ற உலகளாவிய அனுபவங்களுக்குப் பின்னர், நாடுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தவும், எதிர்கால தொற்றுநோய்களுக்கு விரைவான பதிலளிப்பை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்டவை. இந்த முடிவு, உலகளவில் “சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தேசிய அதிகாரம்” ஆகியவற்றுக்கிடையிலான சமநிலையைப் பற்றிய விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவது மற்றும் நிதி உதவியை நிறுத்துவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்ற அதேவேளை  இத்தாலி மற்றும் இஸ்ரேல் நாடுகளும் WHO-வின் புதிய விதிகள் தங்களது தேசிய சுகாதாரக் கொள்கைகளில் தலையிடுவதாகக் கூறி,  எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளன.
மேலும் பல ஆப்பிரிக்க நாடுகள் இந்த விதிகள் சமத்துவமற்றவை என்றும், தடுப்பூசி மற்றும் மருத்துவத் தொழில்நுட்பங்களைப் பகிர்வதில் செல்வந்த நாடுகள் காட்டும் பாரபட்சத்தை இவை சரிசெய்யவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளன.

#NewZealandNews #WHOPandemicTreaty #NationalSovereignty  #WinstonPeters #GlobalHealthPolitics

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More