Home இலங்கைவீராவில திறந்த சிறை முகாமுக்கு அருகில் பேருந்து விபத்து – 4 பேர் பலி

வீராவில திறந்த சிறை முகாமுக்கு அருகில் பேருந்து விபத்து – 4 பேர் பலி

by admin

 

வீரவில (Weerawila) திறந்த சிறைச்சாலை முகாம் அருகே   இடம்பெற்ற பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். காவல்துறை  தகவலின்படி, இன்று காலை   கதிா்காமத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தும்,  கராப்பி ட்டியிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதே இந்த விபத்திற்குக் காரணமாகும்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள்  அம்பாந்தோட்டை மற்றும் தெபரவெவ   வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  விபத்துக்கான மேலதிக விசாரணைகளை  காவல்துறையினா்  மேற்கொண்டு வருகின்றனர்.

#WeerawilaAccident #BusCollision #HambantotaNews #SLTB #RoadSafetySL

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More