134
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிகுந்த ஆத்திரத்தில் இருப்பதாகவும், அமெரிக்காவின் நட்பு நாடுகள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாம் (Lindsey Graham) தவறுதலாகப் பதிவிட்டு, பின்னர் அவசரமாக நீக்கிய ஒரு சமூக வலைதளப் பதிவு இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் (Strait of Hormuz) பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐரோப்பிய நட்பு நாடுகள் முன்வராதது குறித்து ஜனாதிபதி டிரம்ப் கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கிரகாம் பதிவிட்டிருந்தார். “அவர் இவ்வளவு கோபமாக இருந்து நான் பார்த்ததே இல்லை” என கிரகாம் குறிப்பிட்டதுடன், அமெரிக்காவின் கூட்டணிகளின் மதிப்பு குறித்துத் தாம் சந்தேகிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
தற்போதைய சூழலில் இப்போராட்டச் சூழலில் 13 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் (Oil Prices) மிக வேகமாக உயர்ந்து வருகின்றன.
தன்னிச்சையாக ஒரு போரைத் தொடங்கிவிட்டு, இப்போது நட்பு நாடுகளின் உதவி கிடைக்காததால் வெள்ளை மாளிகை நிர்வாகம் கடும் நெருக்கடியில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதையே செனட்டர் கிராகமின் இந்த “அவசரப் பதிவு மற்றும் நீக்கம்” உறுதிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Spread the love

