Home இலங்கை🎓  கறுப்பு கொடி விவகாரம் –  யாழ் பல்கலை முன் மாணவர்கள் போராட்டம் 

🎓  கறுப்பு கொடி விவகாரம் –  யாழ் பல்கலை முன் மாணவர்கள் போராட்டம் 

by admin

சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு கறுப்பு கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம்  காவல்துறையினா்  விசாரணை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 10ஆம் திகதி காவல்துறையினா்   பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பதிவு செய்தனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள்  காவல்துறையினா்   நுழைந்தமைக்கும், நிர்வாகத்தினரிடம் நீண்ட நேர விசாரணை நடத்தியதற்கும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மூவரை விசாரணைக்கு அழைக்க  காவல்துறையினா்    அழைப்பாணை அனுப்பியிருந்தனர். ஆனால், அவர்கள் அந்த விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.

பல்கலைக்கழக மட்டத்தில் ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்றுள்ள நிலையில், காவல்துறையினா்   தனியாக விசாரணைக்கு அழைப்பது மாணவர்களை அச்சுறுத்தும் முயற்சியாகும் என்று குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்:மாணவர்கள் வியாழக்கிழமை விரிவுரைகளை புறக்கணித்ததுடன் பல்கலை முன்றலில் போராட்டம் நடத்தினர்

மேலும், காவல்துறையினா்   தொடர்ந்து இவ்வாறு அழுத்தம் கொடுத்தால், தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் எனவும் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More