155
மீள்குடியேற்றத்தின் பின்னர் முதல் தடவையாக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிறப்பாகக் நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக வேலைப் பளுவுக்கு மத்தியில் தங்களது மருத்துவ பணியினை இரவு பகலாக மேற்கொண்டு வரும் மாவட்ட வைத்தியசாலையின் மருத்துவர்கள், தாதியர்கள், மற்றும் பணியாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சித்திரை புத்தாண்டு நிகழ்வுகளை நடாத்தியிருந்தனர்.
வைத்தியசாலைப் பணியாளர்கள் அனைவரும் ஒருதாய்பிள்ளைகளாக ஒன்றிணைந்து இந்தவிழாவின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கெடுத்தமை சிறப்பம்சமாகும்.
மரதன் ஓட்டம் கிளித்தட்டு வலைப்பந்து கயிறிழுத்தல் தலையணைச்சண்டை துடுப்பாட்டம் யானைக்குக் கண்வைத்தல் சங்கீதக்கதிரை, கிட்டிப்புள்ளு விளையாட்டு, ஈருருளி ஓட்டம் என சுதேச மற்றும் மேலைத்தேய விளையாட்டுக்களுடன் இவ்விழாவானது சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது
இந்த விழாவின் அங்கமாக இடம்பெற்ற பல்வேறுவிளையாட்டு நிகழ்வுகளுக்கான பரிசில்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கேதீஸ்வரன், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும் கிளிநொச்சி மாவட்டப் பொதுமருத்துவமனை மற்றும் பிராந்திய சுகாதாரசேவைகள் முன்னாள் பணிப்பாளருமாகிய வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் பணியாளர்களது வேண்டுகோள்களை அடுத்து, பதில் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டிலிப்லியனகே அவர்களது ஆலோசனைக்கு அமையஇ விழா ஒழுங்கமைப்புக் குழு சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர்வைத்திய கலாநிதி ஜெயந்தன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு இவ்விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது
Spread the love