Home உலகம்டெக்சாஸ் மாநில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு

டெக்சாஸ் மாநில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு

by admin

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போர்ட் ஆர்தர் (Port Arthur) பகுதியில் அமைந்துள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவி காணப்படுவதுடன், வெடிப்புச் சத்தத்தின் தாக்கத்தால் அருகிலுள்ள வீடுகளும் அதிர்வடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தையடுத்து, மாநில அதிகாரிகள் அப்பகுதி மக்களை உடனடியாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளுக்குள் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக நகரத்தின் மேற்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து இயக்கமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை இந்த வெடிப்பில் உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், காற்றின் தரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

#TexasExplosion #PortArthur #RefineryFire #ShelterInPlace
#USA_News

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More