வெளிமாவட்டங்களில் 08 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வரும் தமக்கு இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது எமது உரிமைகளை திட்டமிட்டு பறிப்பதாக இருக்கின்றது. நாம் கல்வி அமைச்சின் சுற்று நிரூபங்களுக்கு இணங்க எமது சேவைகளை சரியாக செய்து முடித்துள்ளோம்.ஆனாலும் வழங்கப்பட்ட இடமாற்றம் இன்னும் எமக்கு கிடைக்காத நிலை இருக்கின்றது.அரசியலும் அதிகாரமும் எமது நியாயத்தை பறிக்கின்றது. எனவே துறைசார் அதிகாரிகள் சுயநலவாதிகளின் சதிக்கு இடம் கொடுக்காது எமது உணர்வுகளை மதித்து எமக்கான நீதியை பெற்று தரவேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்


