ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல்கள் செல்லும் விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான், இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் ஈராக் போன்ற நட்பு நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாக செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போரினால் இந்த கடல் பாதை முன்பு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் கொண்டு செல்லும் கப்பல்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பல நாடுகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், Donald Trump முன்வைத்த 15 அம்ச அமைதி திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது, அது நியாயமற்றது என்றும் அமெரிக்கா உண்மையான பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது. தற்போதைய சூழலில், எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், நட்பு நாடுகளுக்காக ஹார்முஸ் ஜலசந்தி திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சத்தால் நூற்றுக்கணக்கான கப்பல்கள் காத்திருந்த நிலையில், இந்த அனுமதி அந்த நெரிசலைக் குறைக்கும் என எதிா்காா்க்கப்படுகின்றது
#HormuzStrait #IranIndiaTrade #EnergySecurity #MiddleEastConflict #GlobalEconomy

