273
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது.
மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் தற்போதைய எரிபொருள் விநியோகம், நகர அபிவிருத்தி திட்டம், சமூக சக்தி நிகழ்ச்சித் திட்டம், க்ளீன் ஸ்ரீலங்கா, விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட விடயங்கள் மற்றும் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டன.இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், வட மாகாண கடற்படைத் தளபதி, பிரதி காவல்துறைமா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

#JaffnaDCC #NorthernProvince #DevelopmentProjects #LandReleaseSL #FisheriesMinister
Spread the love