Home இலங்கைகுருநகாில் கத்திக்குத்து – இளைஞன் படுகாயம்

குருநகாில் கத்திக்குத்து – இளைஞன் படுகாயம்

by admin

 

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த இளைஞனை  காவல்துறையினா்  கைது செய்துள்ளனர்.

குருநகர் பகுதியில் இரு இளைஞர்களும் போதையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட வேளை ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மற்றையவர் மீது சரமாரியாக குத்தியுள்ளார்.  அதில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு. யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினா் தாக்குதலுடன் தொடர்புடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#JaffnaCrime #GurugasConflict #StabbingIncident #JaffnaPolice #PublicSafety

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More