சட்டவிரோத மணலுடன் பயணித்த உழவு இயந்திரத்தை வழி மறிக்க முற்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தரை மோதி கொலை செய்த சாரதி

by admin

 

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மோதியதில் காவல்துறை  உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கொடிகாமம் பகுதியில் , வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறைக் குழுவினர் , மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முற்பட்ட வேளை , உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து  காவல்துறை குழுவினர் மீது மோதி விட்டு தப்பி சென்றுள்ளார்.

உழவு இயந்திரம் மோதியதில்  காவல்துறை சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பிறெட் என்பவர்  உயிரிழந்துள்ளார். உயிரிழந்த காவல்துறை  அதிகாரியின் சடலம் சாவகச்சேரி காவல்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தினை ஏற்படுத்திய உழவு இயந்திர சாரதியை கைது செய்வதற்கு விசேட காவல்துறை குழுக்கள் களமிறங்கி தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#Illegal Sand Smuggling #Tractor Accident  #Police Officer Death #Driver Escaped #Police Investigation)

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More