Home இலங்கைஅதீத போதையில் வீதியில் தூங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு

அதீத போதையில் வீதியில் தூங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணத்தில் அதீத போதையில் வீதியில் படுத்துறங்கியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் , மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ப்பாய் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய நபரே அவ்வாறு உயிரிழந்துள்ளார்

அதிக போதையில் வீடு நோக்கி நேற்று முன்தினம் இரவு வேளை சென்று கொண்டிருந்தவர் , போதையில் வீட்டுக்கு சற்று தொலைவில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் படுத்துறங்கியுள்ளார்.  அவ்வேளை வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் , வீதியில் படுத்திருந்தவருடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய்  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#Jaffna Accident #Kopay #Death # Intoxication #Jaffna #Point Pedro Road)

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More