லெபனானில் நடைபெற்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், துணிச்சலான பத்திரிகையாளர் பாத்திமா ப்தூனி, Fatima Bdouini (மார்ச் 28) கொல்லப்பட்டுள்ளாா். லெபனான் மீதான தாக்குதல்களின் உண்மையான நிலையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என அறியப்படும் இவர், தனது செய்தி பணியின் போது குறிவைத்து தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர், Al-Manar ஊடகத்தின் Ali Shaib உள்ளிட்ட சக செய்தியாளர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் பயணித்த வாகனம் “PRESS” என தெளிவாகக் குறிக்கப்பட்டிருந்தபோதிலும், அது நேரடியாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாத்திமா ப்தூனி,வெறும் செய்தியாளராக மட்டுமல்லாமல், அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த துணிச்சலான குரலாகவும் பார்க்கப்பட்டார். தனது மக்களின் துயரங்களையும் போராட்டங்களையும் உலகுக்கு எடுத்துச் சொல்லும் பணியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்த சம்பவம், போர் பகுதிகளில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
#Fatima Ftouni #Al-Manar TV #LebanonWar #Journalist Killed #Israeli Airstrike #Ali Shoeib

