புங்குடுதீவு மாணவி  கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவா் பெண் மருத்துவரை   துஷ்பிரயோகம் செய்ய முயற்சி

by admin

 

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி  வித்யா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், பல்லேகலை தும்பறை சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அவரைப் பரிசோதித்துக் கொண்டிருந்த பெண் மருத்துவரை   துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்த உடனே அங்கிருந்த சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளும் மருத்துவமனை பணியாளர்களும் விரைந்து செயல்பட்டு கைதியை கட்டுப்படுத்தினர். இதனால் மருத்துவர் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக இருந்தார். இச்சம்பவம் தொடர்பாக  காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்; மேலும், குறித்த கைதி வித்யா வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே கடுமையான குற்றத்தில் தண்டிக்கப்பட்டவர் இத்தகைய நடத்தை காட்டுவது, அவர்களின் மனநிலை மற்றும் கண்காணிப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய நிலையை காட்டுகிறது.

#PallekelePrison  #PallekelePrison

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More