பாதாள உலகத் தலைவராகக் கருதப்படும் மாகந்துரே மதுஷ் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளில், ஷானி அபேசேகர தலைமையிலான குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ,ஜனக் நந்தன உள்ளிட்ட நான்கு காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய முயன்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர முன்னெடுக்கும் இந்த விசாரணைகளில் இருந்து தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்த உத்தரவை பிரியந்த பெர்னாண்டோ வழங்கியதுடன், மனுதாரர்கள் சார்பில் அலி சப்ரி முன்வைத்த வாதங்களையும் கருத்தில் கொண்டது. தங்களை சட்டவிரோதமாக கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தையும், விசாரணை தமக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்ற காரணத்தையும் முன்வைத்த மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கைது நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திய நீதிமன்றம், வழக்கை மே 15 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
#MadushMurderCase #CID #ShaniAbeysekera #CourtOrder #AliSabry #SriLankaNews #CrimeInvestigation

