17 ஆண்டுகால நிலக்கரி ஊழல்: சிஐடியிடம் ஜனாதிபதி செயலகம் முறைப்பாடு!

by admin

 

இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட நடைமுறைகளில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, ஜனாதிபதி செயலகம் இன்று(11)  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.  கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான நீண்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதி ஒப்பந்தங்கள் முறையற்ற கேள்விப்பத்திர நடைமுறைகள் மற்றும் அதிக விலைக்கு நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட பாரிய நிதி இழப்பு குறித்து இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SriLanka #CoalScandal #Corruption #CIDInvestigation #FraudAllegations #GovernmentProbe

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More