Home இலங்கைஅல்லைப்பிட்டியில் மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் ஜனவரி மாத பத்திரிகையில் சுற்றப்பட்ட மூன்று மதுபான போத்தல்கள் மீட்பு

அல்லைப்பிட்டியில் மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் ஜனவரி மாத பத்திரிகையில் சுற்றப்பட்ட மூன்று மதுபான போத்தல்கள் மீட்பு

by admin

 

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  குறித்த சிதிலங்கள் காணப்பட்ட பகுதிக்கு அண்மையில் உள்ள மரம் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் மூன்று மதுபான போத்தல்களும் , இளம்சிவப்பு (பிங் கலர்) நிற ரீஷேர்ட் ஒன்றும் காணப்படுகிறது.

அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனது காணியினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பார்வையிட சென்ற நபர் என்பு சிதிலங்களை கண்ணுற்று , காவல்துறையினரின் அவசர சேவை இலக்கத்திற்கு அறிவித்திருந்தார்.  அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது அக்காணிக்குள் நின்ற மரம் ஒன்றில் தூக்கு போட்டமைக்கான அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , மரத்திற்கு அருகில் என்பு சிதிலங்கள் ஆங்காங்கே காணப்பட்டுள்ளன. உடலை மிருகங்கள் கடித்து குதறி  இருக்கலாம் அதனால் என்புகள் சிதறி காணப்படுகிறது என காவல்துறையின சந்தேகிக்கின்றனர்.
அதேநேரம் , தூங்கிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மரத்தின் கிளை ஒன்றில் பிங் கலர் டீசேர்ட் ஒன்று காணப்படுகிறது. அது உயிரிழந்தவரின் டீசேர்ட்டாக இருக்கலாம் எனவும் , அதற்கு அருகில் உள்ள கிளை ஒன்றில் காணப்பட்ட பையில் இருந்து ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியான பத்திரிக்கையில் சுற்றப்பட்ட மதுபானத்துடன் மூன்று மதுபான போத்தல்களும் காணப்பட்டுள்ளன.
அதேவேளை அப்பகுதியில் கிழிந்த நிலையில் கறுப்பு நிற நீள காற்சட்டை ஒன்றும் காணப்படுகிறது அதுவும் உயிரிழந்த நபரின் ஆடையாக இருக்கலாம் எனவும் , மிருகங்கள் உடலை இழுத்த வேளை காற்சட்டையும் கிழிந்து இருக்கலாம் எனவும் காவல்துறையினா் சந்தேகிக்கின்றனர்.
ஊர்காவற்துறை  காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்மையில் எவரும் காணாமல் போனதாக முறைப்பாடுகள் எவையும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் காவல்துறையினா் தெரிவித்தனர்.  இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் , யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி , யாழ்ப்பாண தடயவியல் காவல்துறையினர் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

#PoliceInvestigation #MysteryDeath #UnidentifiedBody #BreakingNews #Allaipiddy

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More