Home இலங்கைதிருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடு.

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடு.

by admin

 

பராபவ புத்தாண்டை முன்னிட்டு இன்று (14)  செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து  ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.   தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு – பராபவ வருடப்பிறப்பு இன்று(14.) காலை 8: 40 நிமிடத்துக்கும் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று காலை 9: 32 நிமிடத்துக்கு பிறந்துள்ளது.

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கேதீஸ்வர  ஆலயத்தில் காலை வழிபாடுகள் நடைபெற்றன. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு தியாகராஜா கருணாநந்த குருக்கள் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன் போது 108 சங்காபி சோகத்தை தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.இதன் போது நூற்றுக்கணக்கான மக்கள் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.  ஆலய தரிசனம் செய்தவர்கள் தங்களுக்குள் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

#Thiruketheeswaram #TamilNewYear2026 #ParabhavaVarusham

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More