சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் நச்சுவாயு பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட நூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக சிரிய மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிவித்துள்ளதனைத் தொடர்ந்து இது குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு பேரவை இன்று அவசரமாக கூடுகிறது.
கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரச ஆதரவு விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் விஷவாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் இட்லிப் மத்திய மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் மேலாக அதிகரித்துள்ளதாக ஐ.நா மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மேலும் குளோரின் விஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் உலங்குவானூர்தி மூலம் வீசியதாக ஐ.நா. சபை அமைப்பு தனது விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா பாதுகாப்பு பேரவை ; அவசரமாக இன்று கூடுகிறது.