155
சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் இலங்கை வழங்கி வரும் ஒத்ஐதுழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது இந்த விடயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். கனிய வளங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Spread the love