மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளின் பின்னரே நடவடிக்கை எடுக்க்பபடும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினாலும், புலனாய்வுப் பிரிவினாலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணைகளின் நிறைவிலேயே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் புலனாய்வு பிரிவினால் பிணை முறி மோசடி தொடர்பில் நடத்தி வரும் விசாரணைகளை நிறுத்துமாறு சட்ட மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.