Home இலங்கைஅரகலய செயற்பாட்டாளர் கைது வழக்கு: தேசபந்து தென்னக்கோன் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

அரகலய செயற்பாட்டாளர் கைது வழக்கு: தேசபந்து தென்னக்கோன் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

by admin
2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ மக்கள் போராட்டக் காலத்தில், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார என்ற இளைஞரைக் கைது செய்து தடுத்து வைத்தமையின் ஊடாக, அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அக்காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபராகக் கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் அப்போதைய பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோரே இந்த உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட அநுருத்த பண்டார என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் (FR) மனுவை விசாரணை செய்த பின்னரே, உயர் நீதிமன்றம் இந்த முக்கியத் தீர்ப்பை வௌியிட்டுள்ளது.
சட்டவிரோதக் கைதுகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் போராளிகளுக்குக் கிடைத்த நீதி மறுமலர்ச்சியாக இத்தீர்ப்பு பார்க்கப்படுகின்றது.🏷️
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More