பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக கனேடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனி நபர் ஒருவர் பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள முயற்சித்திருந்தார் எனவும், இந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒன்டாரியொவின் ளுவசயவாசழல ல் இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் தாக்குதல் முயற்சியை முறிடியத்துள்ளனர்.
தாக்குதல் முயற்சி மேற்கொண்ட நபர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த தகவல் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
எவ்வாறான தாக்குதல் எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.