156
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 28.8 ஏக்கர் காணியை இன்று இராணுவத்தினர் பொதுமக்களிடம் கையளித்துள்ளனர். கடந்த 27 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்த குறித்த பகுதியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் மற்றும் உண்ணாவிரதங்களை மேற்கொண்டிருந்தனர். இந்தநிலையில் இன்று 28.8 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியானது கட்டிடங்கள் எதுவுமற்று தரைமட்டமாக காணப்படுவதனால் மக்கள் தமது காணிகளை அடையாளம் காண்பதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love