அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நாட்டின் தலைவர்கள் மற்றும் மக்களை சிறைச்சாலைகளில் அடைத்து வைக்க முடியாது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நியமித்துள்ள நீதிபதி ஒருவருக்கு ஒட்டுமொத்த நீதிச் சேவைக் சட்டமைப்பும் சட்டத்தரணிகளும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். குறித்த நீதிபதியை அரசாங்கத்தினால் விலக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர் உண்மையில் நாட்டை யார் ஆட்சி செய்கின்றார்கள் என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்