197
சிங்கப்பூர் ஓபன் சுப்பர் பட்மின்டன் தொடரில் இந்திய வீரர் சாய் பிரணீத் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். நேற்றையதினம் சிங்கப்பூரில் இடம்பெற்ற இறுதி போட்டியில் கிடம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சாய் பிரணீத் ஆகியோர் போட்டியிட்டனர். இதன்போது, 17-21, 21-17, 21-12 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை தோற்கடித்து பிரணீத் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
அரையிறுதிப் போட்டியின் போது கொரியா வீரரான லீ டாங் கியுனை 21-6, 21-8 என்ற நேர் என்ற செட் கணக்கில் சாய் பிரனீத் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love