முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க அவரது தாயாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முருகனிடமிருந்து சில நாட் களுக்கு முன்பு, 2 கைத்தொலைபேசிகள் சிம் கார்டுகள் பறிமுதல் செய் யப்பட்டதாகவும் அதன்படி சிறை விதிகளின்படி தடை செய்யப்பட்ட பொருளை முருகன் பயன்படுத்திய குற்றச் சாட்டின் அடிப்படையில், அவரை பார்வையாளர்கள் யாரும் சந்திப்பது தற்காலிகமாக தடை செய் யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், நேற்றையதினம் வேலூர் மத்திய சிறைக்கு வந்த முருகனின் தாயார் சோமணி முருகனை சந்திக்க அனுமதி அளிக்கு மாறு மனு அளித்த போது அதனை பரிசீலனை செய்த சிறை நிர்வாகம் அவரது மனுவை ரத்து செய்துள்ளனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சோமணி ஒரு மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளதாகவும் கடந்த 20 நாட் களாக முருகனை சந்திக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில், இலங்கை திரும்ப வேண்டி இருப்பதால் இந்த முறை முருகனை பார்க்க முடியாதது வருத்தமாக உள்ளது எனவும் சாந்தனை மட்டும் சந்தித்து பேசியதாகவும் தங்களை தமிழக அரசு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையுடன் சாந்தன் இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.