விசாரியுங்கள் அறிந்துக் கொள்ளுங்கள் அது உங்களது உரிமையாகும் என்ற தொனிப்பொருளில் பொது மக்களுக்கு பொறுப்பு கூறும் வகையில் அரச சேவையொன்றினை வழங்கும் முகமாக கல்வி அமைச்சின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான தகவல் அறியும் நிலையம் ஒன்று கல்வி அமைச்சில் திறந்து வைக்கபட்டுள்ளது.
இந்த நிலையத்தின் ஊடாக கல்வி தொடர்பான தகவல்களை அதிபர்கள்¸ ஆசிரியர்கள்¸ மாணவர்கள்¸ பெற்றோர்கள் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் காணப்படும் அனைத்து கல்விசார் நிறுவனங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான இணையதளம் ஒன்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்¸ஆகியோரால் வைபவ ரீதியாக ஆரபித்து வைக்கபட்டது.
இந் நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி¸ உட்பட அமைச்சின் மேலதிக செயலாளர்கள்¸ அதிகாரிகள்¸ உத்தியோகஸ்த்தர்கள் கலந்து கொண்டார்கள்