Home இலங்கையாழ்ப்பாணத்தில் மருத்துவர் ஒருவரின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் மருத்துவர் ஒருவரின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல்

by admin


யாழ்ப்பாணத்தில் மருத்துவர் ஒருவரின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சுன்னாகம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் சுன்னாகம் உடுவில் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்கள் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளளனர்.

தாக்குதலில் மருத்துவரின் தந்தை காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது மருத்துவர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் விசாரணகைளை ஆரம்பித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More