சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக இமாச்சல பிரதேச முதலமைச்சர் வீரபத்ர சிங் டெல்லியில் உள்ள அமுலாக்கத் துறை இயக்குநரகத்தில் நேற்றையதினம் நேரில் முன்னிலையாகியுள்ளார். 2009- 2011 காலப்பகுதியில் மத்திய உருக்குத் துறை அமைச்சராக இருந்த வீரபத்ர சிங், வருமானத்துக்கு அதிகமாக 10 கோடி ரூபாக்கு மேலதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. சிபிஐ நீதிமன்றத்தில் சிங், அவரது மனைவி பிரதிபா மற்றும் சிலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் முன்னிலையாகுமாறு வீரபத்ர சிங்குக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தநிலையில் நேற்றையதினம் முன்னிலையாகியுள்ளார்.