இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை மீளவும் வழங்குவதானது, மனித உரிமை மீறல்களை உதாசீனம் செய்து , விருது வழங்குவதற்கு நிகரானது என சில மனித உரிமை நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இலங்கை அரசாங்கம் மனித உரிமை விவகாரங்களில் உரிய முனைப்பு காட்டத் தவறினால் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் தி;ட்டம் வழங்கப்படக்கூடாது என அவை தெரிவித்துள்ளன. சில மனித உரிமை நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன.
உரிய காலத்தில் இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஐரோப்பிய ஒன்றியம் சலுகைத் திட்டத்தை வழங்கக் கூடாது என கோரியுள்ள மனித உரிமை நிறுவனங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளன. முதன்மையான சில பரிந்துரைகள் ஆறு மாத காலத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.