பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளிலும் இந்த விடயம் குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவ்வாறு எடுத்தால் மட்டுமே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் குறித்து தீர்மானிக்க முடியும் என ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துள்ளது. புதிய உத்தேச சட்டம் பயங்கரவாதம் என்பதனை மிக விரிவாக வரைவிலணக்கப்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.