கியூபாவின் உள்நாட்டு போக்குவரத்து விமான சேவையின் (Aerogaviota) ஒன்று நேற்று சனிக்கிழமை விபத்துக்கு உள்ளானதில் 39 பேர் பலியாகி உள்ளனர். கியூபாவின் ராஸ் ரெரராஸ் நகருக்கு அண்மையில் தரையிறங்க முற்பட்ட வேளையில் விமானம் விபத்துக்கு உள்ளானதாக கியூபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Aerogaviota விமான சேவை 1990களில் கியூபாவின் இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேவையில் Antonov An-26, மற்றும் ATR 42-500 and Mil Mi-8 aircraft. உள்ளட்ட 22 விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு சேவையை தொடரும் இந்த விமான சேவை நிறுவனம் கிங்ஸ்ரனில் இருந்து மொன்றிகோவுக்கான சர்வதேச விமான சேவையை மட்டும் நடத்துகின்றது. தரையிறக்குவதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்துடன் 2017 ல் கியூபாவில் இடம்பெற்ற 5 ஆவது பாரிய விமான விபத்து இது என கியூபாவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற இராணுவ விமானமும் விபத்துக்கு உள்ளானது – 8 பேர் பலி:-
கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இருந்து 8 பேருடன் புறப்பட்டுச்சென்ற இராணுவ விமானம் லோமா டி லா பிமென்டா என்ற மலையில் மோதியதில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும் இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.