வானில் ஏற்பட்ட திடீர் காற்றுக் கொந்தளிப்பினால் விமானப் பயணிகள் காயமடைந்துள்ளனர். ரஸ்யாவின் மொஸ்கோவிலிருந்து தாய்லாந்தின் பாங்கொக் நகர் நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் சிலருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த எவருக்கும் உயிராபத்து கிடையாது என ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காற்று கொந்தளிப்பினால் விமானம் ஆடத்தொடங்கியதாக பயணி ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பாங்கொக்கில் தரையிறக்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதெனவும் காயமடைந்தவர்களில் 24 பேர் ரஸ்யப் பிரஜைகள் எனவும், மூன்று பேர் தாய்லாந்து பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தெளிவான வானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென இந்த காற்றுக் கொந்தளிப்பு ஏற்பட்டதனால், விமான சிற்பந்திகளினால் பயணிகளுக்கு எவ்வித எச்சரிக்கையையும் விடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.