Home உலகம்உலகின் வயது முதிர்ந்த மனிதர் மரணம்

உலகின் வயது முதிர்ந்த மனிதர் மரணம்

by admin


உலகின் வயது முதிர்ந்த மனிதராக கருதப்படும் மனிதர் மரணித்துள்ளார். இந்தோனேசியாவில் வாழ்ந்து வந்த 146 வயதான சோடிமெட்ஜோ (Sodimedjo )  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 1890ம் ஆண்டு டிசம்பர் மாதம் சோடிமெட்ஜோ  பிறந்துள்ளதாக அவரது ஆவணங்களின் ஊடாக தெரிய வந்துள்ளது. 1900 மாம் ஆண்டு முதலே இந்தோனசியாவில் பிறப்பு ஆவணங்கள் பதியப்படும் முறைமை அறிமுகம் செய்யப்பட்டது எனவும் அதற்கு முன்னர் பல்வேறு பிழைகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 12ம் திகதி நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோடிமெட்ஜோ சிகிச்சை பெற்றுக் கொண்டு வீடு திரும்பியதன் பின்னர் அவரது உடல் நிலை மீளவும் மோசமடைந்தது என அவரது பேரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். நான்கு மனைவிகளைக் கொண்ட சோடிமெட்ஜோ  கடுமையாக புகைப்பிடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More